மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாஇம்மாதம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, மதுரை அருகே உள்ள தோப்பூரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு ரூ.1,264 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மூன்று ஆண்டுகளில் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த மாதம் 3வது வாரத்தில் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளதாக பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், விழாவுக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஜனவரி 26, 27ம் தேதி பிரதமர் மதுரை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதேப்போன்று திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்க உள்ளார். பின்னர் மதுரை மருத்துவமனை நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த பிறகு அன்றைய தினமே தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் விழாவுக்கு வருகை தரவுள்ளார் பிரதமர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment