கேரள மாநிலம், திருவனந்தபுரம், நெய்யாறு வனச்சரணாலயத்தில் அமைந்துள்ளது அகஸ்தியர்கூடம். அகஸ்தியர் முனிவர் இங்குத் தங்கி இருந்ததாக இங்குள்ள ஆதிவாசி மக்களான கனி பழங்குடியினர் நம்புகின்றனர். அகஸ்தியர்கூட மலையில், அகஸ்தியர் முனிவருக்குத் தனியாக கோயில் இருந்தாலும் இங்கு வழிபாடு செய்வதற்கு பெண்களுக்கு காலங்காலமாக அனுமதியில்லை. இங்குள்ள கனி பழங்குடியைச் சேர்ந்த பெண்கள் கூட சிலை அருகே செல்வது கிடையாது. இந்நிலையில் மலப்புரத்தைச் சேர்ந்த ‘விங்ஸ்’ என்ற பெண்கள் நல அமைப்பும், கோழிக்கோட்டைச் சேர்ந்த ‘அன்வேஷ்’ என்ற மகளிர் நல அமைப்பும் அகஸ்தியர்மலையில் பாலினபாகுபாடு காட்டப்பட்டு பெண்கள் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையை நீக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி அளித்த தீர்ப்பில், “ பாலின அடிப்படையில் அகஸ்தியர்கூடத்தில் பெண்கள் செல்ல தடைவிதிக்க முடியாது. அனைத்துப் பெண்களும் மலைக்குச் செல்லலாம்” எனத் தீர்ப்பளித்தார். இதனையடுத்து கேரள வனத்துறை அகஸ்தியர்கூட மலைக்கு டிரக்கி செல்வோர்க்கான ஆன்-லைன் முன்பதிவை நேற்று தொடங்கியுள்ளது.வரும் 14ம் தேதி அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள், ஆண்கள் அனைவரும் மலையேற்றத்துக்குச் செல்ல உள்ளனர்.
சபரிமலையைத் தொடர்ந்து அகஸ்தியர்கூட மலைக்கு பெண்கள் அனுமதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment