தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர 'கேட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான கேட் தேர்வு கடந்த நவம்பர் 25ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வினை 2.1 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகளை கொல்கத்தா ஐஐஎம் நேற்று வெளியிட்டது. இதில் 11 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுதவிர 21 மாணவர்கள் 99.99 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதால் கட் ஆப் மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சியில் மாணவர்கள் அதிகளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். மேலும், தேர்ச்சி பெற்ற 70 சதவீதம் பேர் பொறியியல் பட்டம் படித்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
கேட் நுழைவுத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை
கேட் நுழைவுத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment