மேகதாது அணை-தமிழக அரசு மனுவினை விசாரிக்கக்கூடாது என கர்நாடக அரசு மனு தாக்கல் - Agnipuratchi

மேகதாது அணை-தமிழக அரசு மனுவினை விசாரிக்கக்கூடாது என கர்நாடக அரசு மனு தாக்கல்

Share This

காவேரி குறுக்கே சுமார் 6 ஆயிரம் கோடி அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு அதற்கான வரைவறிக்கையினை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதற்கு அனுமதி அளித்த நீர்வளத்துறை விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனைத்துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெறக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசின் மனு மீது முடிவெடுக்கும்வரை, அணை கட்டும் பணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், மேகதாது அணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மனுவினை விசாரிக்க கூடாது என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இது தமிழக அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages