மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் - Agnipuratchi

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் என்னென்ன வசதிகள்

Share This

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் அமையவுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 45மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகளுடன் நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது. மேலும் 11 சிறப்பு மருத்துவ பிரிவுகள், 15 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகளுடன் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 100 மாணவ மாணவிகள் மருத்துவம் படிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரி மற்றும் 60 பேர் படிக்கும் வகையிலான செவிலியர் கல்லூரிகளும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீண்டகால கனவான எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages