நதிகளின் இணைப்பு குறித்து ஆந்திர தலைநகர் அமராவதியில் நிதின் கட்கரி அளித்த பேட்டியில் கூறியதாவது, தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளது. இது மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு விரைவில் தாக்கல் செய்யப்படும். கோதாவரி ஆற்றிலிருந்து வங்கக் கடலில் கலக்கும் 1100 டிஎம்சி தண்ணீரை உபயோகமான முறையில் பயன்படுத்துவதுதான் இத்திட்டம். இதற்கு ரூ.60 ஆயிரம் கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான நிதி உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து பெறப்படும் என்று கூறினார். மேலும், "தமிழகம்-கர்நாடகா இடையே தண்ணீர் பிரச்னை உள்ளது. அதனால் கோதாவரி நீரை தமிழகத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்தோம். இதற்காக சிறப்பு தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் உள்ள ஆந்திர இன்ஜினியர் பரிந்துரைத்துள்ளார். கோதாவரியையும், காவிரி நதியையும் இணைக்க குறைந்த தடிமனுள்ள ஸ்டீல் பைப்புகள் பயன்படுத்தப்படும். தண்ணீர் ஆவியாகி வீணாகும் என்பதால் கால்வாய் அமைக்கும் திட்டத்தை பயன்படுத்துவதில்லை என முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்துக்கான செலவு ரூ.100 கோடி ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஆந்திராவுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் பாகுபாடு பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவேரி-கோதாவரி இணைப்பு குறித்து நிதின் கட்கரி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment