குழந்தையை கடத்திய தாசில்தார் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் - Agnipuratchi

குழந்தையை கடத்திய தாசில்தார் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

Share This

பெங்களுருவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தையை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த தம்பதியினரின் வீட்டுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மூன்று பேர் குழந்தையை கடத்தி செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து பெங்களூரை சேர்ந்த அருண்குமார், மஞ்சுநாத் மற்றும் யோகேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்தி தூத்துக்குடியின் ஒட்டபிடாரம் தாசில்தாருக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் காரில் குழந்தையை கடத்தி சென்று கொண்டிருந்த தாசில்தார் மற்றும் அவரது மனைவியை சேலம் ஒமலூரில் மடக்கி பிடித்து கைது⛓ செய்தனர். இந்நிலையில், தற்போது கைது⛓ செய்யப்பட்டுள்ள தாசில்தார் தாமஸ் அருள் பயாஸ் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages