மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் நஷ்டஈடு வழக்கு - Agnipuratchi

மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் நஷ்டஈடு வழக்கு

Share This

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக அண்ணையில் பத்திரிக்கையாளா் மேத்யூ சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தாா். அந்த வீடியோவில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் முதல்வா் பழனிசாமிக்கு நேரடி தொடா்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். பத்திரிக்கையாளர் மேத்யூஸ் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் கோடநாடு விவகாரத்தில் தன் பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேத்யூஸ் நடந்து கொள்கிறார். அதை ஈடுகட்டும் விதமாக ரூ.1.10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages