காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பதவி - Agnipuratchi

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பதவி

Share This

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார். வாக்காளர்களை சந்தித்து ஆதரவுகளையும் திரட்டுவார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார். இந்நிலையில், தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் இன்று வெளியிட்டார். மேலும், உத்தரபிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலினை மனதில் வைத்து, அவர் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages