அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இடைக்கால உத்தரவிட முடியாது -உயர்நீதிமன்றம் - Agnipuratchi

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இடைக்கால உத்தரவிட முடியாது -உயர்நீதிமன்றம்

Share This

அரசின் நிதிநிலைமை தொடர்பான விவகாரங்களில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு போடமுடியாது எனவும் அரசு ஊழியர் போராட்டம் பற்றிய பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடாமல் வழக்கு தொடுத்து இருந்தால் அரசிடம் கேட்டு முடிவெடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து, சட்டரீதியாக போராடாமல் ஏன் தெருவில் இறங்கி போராடுகிறீர்கள்⁉என ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கோரிக்கைகள் குறித்து அரசும், ஊழியர்களும் தான் பேசி பிரச்னையை தீர்க்கவேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் போராட்டத்தினால் தீர்வு ஏற்படாதுன எனவும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages