மக்கும் பொருட்களால் பைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் - Agnipuratchi

மக்கும் பொருட்களால் பைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

Share This

போலிகளை தடுக்கும்  நோக்கில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, மக்கும் மூலப்பொருட்களால் பைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி, "பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளின் கீழ், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒரு மாதத்திற்குள் அனுமதி பெற்று, அதை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும். மக்கும் மூலப்பொருட்களால் ஆன பைகள் யார் யாருக்கு விற்கப்படுகின்றன என்பதை தெரிவிப்பதோடு, இணைய தளம் உருவாக்கி தயாரிப்பு, விற்பனை உள்ளிட்ட முழுவிவரங்களையும் பதிவேற்ற வேண்டும். அனுமதிக்கப்பட்ட பைகளை மட்டுமே தயாரிக்க வேண்டும், போலிகளை தடுக்க, தயாரிக்கும் பைகளில் பார் கோடு இடம்பெற வேண்டும். திறம்பட மறுசுழற்சி செய்வதற்கான திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த உத்தரவுகளை செயல்படுத்தும் வரை, தயாரித்துள்ள பைகளை விற்பனை செய்யக்கூடாது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages