வேலை நிறுத்த போராட்டத்திற்க்கு ஆதரவு-தலைமை செயலக ஊழியர்கள் 7 பேர் இடைநீக்கம் - Agnipuratchi

வேலை நிறுத்த போராட்டத்திற்க்கு ஆதரவு-தலைமை செயலக ஊழியர்கள் 7 பேர் இடைநீக்கம்

Share This

ஊதிய உயர்வு, உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைமைச் செயலக ஊழியர்கள் 7 பேரை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசானது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிதித்துறையை சேர்ந்த 3 பேர், சட்டத்துறையை சேர்ந்த ஒருவர் வேளாண்துறையை சேர்ந்த ஒருவர், பொதுப்பணித்துறையை சேர்ந்த ஒருவர் மற்றும் உள்துறையை ஒருவர் என மொத்தம் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இப்போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்ததன் அடிப்படையில் ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages