ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் பேராட்டம்-துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு - Agnipuratchi

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் பேராட்டம்-துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு

Share This

ஏழு அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பு ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோவின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிககள், தொடக்கக் கல்வியை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதை தமிழக அரசு கைவிடவேண்டும் என்பதை முன்னிறுத்தி, ஜாக்டோ ஜியோவின் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages