வாக்குச்சீட்டு முறைக்கு இனி வாய்ப்பில்லை-தேர்தல் ஆணையர் திட்டவட்டம் - Agnipuratchi

வாக்குச்சீட்டு முறைக்கு இனி வாய்ப்பில்லை-தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

Share This

கடந்த நாடாளுமன்ற தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்து தான் பா.ஜ.க. வெற்றி பெற்றது என்று குற்றம் சட்டாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவா்களும் மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோாிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய தலைமை தோ்தல் ஆணையா் சுனில் அரோரா, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடா்பான விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் அனுமதி கோாியுள்ளது. பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப மாட்டோம். தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தான் பயன்படுத்துவோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களும் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச்சீட்டு முறையும் தொடா்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அவா் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages