இடைத்தேர்தல் ரத்து செய்வது குறித்து மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டதா❓-நீதிமன்றம் கேள்வி - Agnipuratchi

இடைத்தேர்தல் ரத்து செய்வது குறித்து மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டதா❓-நீதிமன்றம் கேள்வி

Share This

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்தது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்துசெய்யதலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை எனவும், மத்திய அரசுடன் ஆலோசித்து தான் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அவரது மனுவில் தேர்தல் ரத்து அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு முன்பாக மத்திய அரசிடம் ஆலோசிக்கப்பட்டதா❓என்பது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages