உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் உரை - Agnipuratchi

உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் உரை

Share This

உலக முதலீட்டாளர் மாநாட்டினை சென்னையில் இன்று துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழ்நாடு 2020 வளர்ச்சியே புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் கனவு. உலகம் முழுக்க உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களால் 2 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் வருங்காலத்தில் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் தொழில் துவங்க தமிழக அரசு அனைத்து வித ஒத்துழைப்பையும் அளிக்கும். புதிய முதலீட்டாளர்கள் வருங்காலங்களில் அதிக அளவில் தமிழகத்தில் தொழில் தொடங்க வருவர் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று கூறியுள்ளார். இவரை தொடர்ந்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "திறமையான தொழிலாளர்களைக் கொண்ட முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது" என்று பேசியுள்ளார். இந்த மாநாட்டில் பிரான்ஸ், யூகே, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages