தமிழர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி கொடுக்கலாம் சந்திரபாபு கடும் கண்டனம். - Agnipuratchi

தமிழர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி கொடுக்கலாம் சந்திரபாபு கடும் கண்டனம்.

Share This

இந்தியாவை பொறுத்தவரை எய்ம்ஸ் மருத்துவமனையானது ஏழைகளுக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கும் மிகவும் பயன் அளிக்கக்கூடியது.

சராசரியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய 3 முதல் 6 லட்சம் வரை செலவு ஆகும் ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் 8500 ரூபாய் தான் செலவாகும் என்றால் இது மக்களுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் நினைத்து பாருங்கள்.

எனவேதான் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் எய்ம்ஸ் அமைய வேண்டும் என்று மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர், ஆனால் மோடி தமிழக மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு ஒதுக்கினார்.                                                                                              தெலுங்கு தேசம் எதிர்ப்பு

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தெலுங்குதேசம் கட்சியின் முன்னாள் Mp யும் ஆந்திர அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் ஆன வத்திரராஜா ரெட்டி பேசியதாவது

மத்திய பாஜக அரசு ஆந்திர மக்களை காழ்ப்புணர்ச்சியுடன் நடத்திவருகிறது நாங்கள் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டோம் ஆனால் இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறி மறுத்து விட்டது.

ராணுவ உற்பத்தி தளவாட நிலையத்தை ஆந்திராவிற்கு கேட்டோம் ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிவிட்டார்கள், இப்போது எய்ம்ஸ் மருத்துவமனையினை ஆந்திராவிற்கு பல வருடங்களாக கேட்டு வருகிறோம் ஆனால் தற்போது அதையும் தமிழகத்திற்கு ஒதுக்கிவிட்டார் மோடி.                                                                                      கூட்டணியில் இருந்த எங்கள் கட்சியின் கோரிக்கையை புறம் தள்ளிய மோடி ஆந்திர மக்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்துவிட்டு தமிழர்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார் இதனை தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வன்மையாக கண்டித்து மிக பெரிய அளவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆந்திரா வரும் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.                                                                                                                    ஆந்திர முதல்வரின் எண்ணஓட்டமானது தமிழர் நலனுக்கு எதிராக உள்ளது இவரையா முக ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக அழைத்துவந்தார் இவர்கள் துணையுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் நிலைமை என்னவாகும்?

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages