குட்கா வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்கள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாக அப்போதைய சென்னை ஆணையர் ராஜேந்திரன் கூறியிருந்தார். ஆனால், தமிழக தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன் அளித்த பிரமாணப்பத்திரத்தில் அதுபோல எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என கூறியிருந்தார். ஆனால், சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனையில், குட்கா முறைகேடு குறித்த ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் தவறான தகவலை தாக்கல் செய்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் மீதான விசாரணையில், குட்கா விவகாரம் குறித்த ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஏற்கனவே ஆணையிடப்பட்டிருந்த நிலையில், நேற்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில், சீலிட்ட கவரில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது நடவடிக்கை கோரிய வழக்கு-ஆவணங்கள் தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment