மேகதாது அணை விவகாரம்-உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு - Agnipuratchi

மேகதாது அணை விவகாரம்-உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு

Share This

மேகதாதுவில்  அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதிக்கு தடை கோரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு, மனுக்களைத் தாக்கல் செய்தன. மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக, தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்தது. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு தனது வரைவு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில்மனுவுக்கு தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மத்திய அரசுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages