விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும்’ என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தில் இந்த ஆண்டு முதல்முறையாக அமெரிக்க படைப்புழு தாக்கியதால், பெருத்த இழப்புக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். அவ்வாறு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஏக்கர் ஒன்றுக்கு 25,000 இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த 5ம் தேதி சட்டமன்றத்தில் வருவாய்த்துறை அமைச்சர், நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதில், மானாவாரியில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு, 2964 வழங்குவதாகவும், நஞ்சைக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5400 வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டு மக்காச்சோளத்திற்கு பயிர்க்கடனாக 20,000 வரை வழங்கலாமென்று அரசு பரிந்துரைத்துள்ளது. ஆனால், இழப்பீடு 5000 மட்டும் என்பது செலவழித்த தொகையில் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை. எனவே, தமிழக அரசு தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிர்கடனை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment