திருப்போரூரைச் சேர்ந்த 69 வயதான, பால் வியாபாரி, ராதாகிருஷ்ணன் என்பவர், அயோர்டிக் வால்வு சுருக்க நோயினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் உள்ள நான்கு வால்வுகளில், இடது கீழ் அறைக்கும், மகா தமணிக்கும் இடையில் உள்ள வால்வு அயோர்டிக் வால்வு எனப்படும். இந்த வால்வு சுருங்கி, இரத்தம் இதய அறையில் இருந்து வெளியேற தடை ஏற்படும். இந்த நோய் இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம், இதய வலி ஏற்படும். இந்த நோய்க்கு தொடை வழியே, கத்தி இன்றி, மயக்கமின்றி, தமணியில் சிறு ஊசி மூலம் நுண்துளை இட்டு, செயற்கை அயோர்டிக் வால்வை, பலூன் குழாய் மூலம் மாற்றும் அறுவை சிகிச்சை அறிமுகமாகியுள்ளது. இதனையடுத்து இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு முதன்முறையாக பலூன் குழாய் மூலம் அயோர்டிக் வால்வு மாற்றும் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சாதாரணமாக 3 மணி நேரம் நடைபெறுகின்ற சிகிச்சை, சுமார் 40 நிமிடங்களிலேயே வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை-மருத்துவர்கள் சாதனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment