கடந்த நவம்பர் 15ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. குறிப்பாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. வேதாரண்யத்தில், கஜா புயல் தாக்கத்தால் தரையில் நிறுத்தப்பட்டிருந்த் 200க்கும் மேற்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகுகள், வலைகள் சேதமடைந்தன. இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சேதமடைந்த படகுகள் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கும் நிவாரணம் அளிக்க தமிழக அரசிடம், மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியை வழங்கியது. ஆனால் புயல் பாதிப்பு ஏற்பட்டு 75 நாட்களுக்கு மேலாகியும் அரசு நிவாரணத் தொகை வழங்காததால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அரசு அறிவித்த நிவாரணத்தை உடனடியாக வழங்கக் கோரி 11 மீனவர்கள் செல்போன் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 2 மணி நேரத்திற்கு பிறகு மீனவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி போராட்டத்தை கைவிட்டனர்.
கஜா புயல் நிவாரணம்-மின்கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment