உலக வங்கியின் தலைவரான ஜிம் யாங் கிம் ராஜினாமா - Agnipuratchi

உலக வங்கியின் தலைவரான ஜிம் யாங் கிம் ராஜினாமா

Share This

கடந்த 2011ம் ஆண்டு உலக வங்கியின் தலைவர் பொறுப்புக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பரிந்துரை செய்யப்பட்ட ஜிம்மின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால், அப்பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், இரண்டாவது முறையாக ஜிம் யாங் கிம் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டு அவரே பொறுப்பில் நீடித்து வந்தார். ஜிம்மின் பதவிக்காலம் 2022ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், முன்கூட்டியே பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தென்கொரியா நாட்டில் பிறந்த அமெரிக்கரான ஜிம் பதவி விலகுவதை அடுத்து, தற்போது உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா, வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்குக்கும் வரை தற்காலிகமாக தலைவர் பொறுப்பையும் கவனிப்பார் என உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages