அப்பல்லோ மருத்துவமனை -பிரத்யேக ரேடியேஷன் சிகிச்சை மையம் திறப்பு - Agnipuratchi

அப்பல்லோ மருத்துவமனை -பிரத்யேக ரேடியேஷன் சிகிச்சை மையம் திறப்பு

Share This

தமிழகத்திலே சிறந்த பல்நோக்கு மருத்துவமனை என்ற பெயரை பெற்ற அப்பலோ மருத்துவமனை, தற்போது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பிரத்யேக புரோட்டான் ரேடியேஷன் மையத்தை சென்னை தரமணியில் திறந்துள்ளது. இதனை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இந்த மையம் குறித்து மருத்துவ இயக்குனர் ராஜேஷ் கூறுகையில் புற்றுநோய் சிகிச்சையில் ரேடியேஷன் சிகிச்சை மிக முக்கியமானது. ரேடியேஷன் சிகிச்சை என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை தாக்கி, அதை பெருக விடாமல் செய்ய உதவுகிறது. ஆனால் அப்படி செய்யும்போது, புற்றுநோயால் பாதிக்கப்படாதசெல்களும் அழிக்கப்படுகிறது. ஆனால் இந்த புரோட்டான் ரேடியேஷன் சிகிச்சையில் ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்படும் அளவு குறைகிறது. கிழக்கு ஐரோப்பாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையைத்தான் அதிக மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்" என்று கூறியுள்ளார். 
மேலும் "மூளையில் ஏற்படுகிற புற்றுநோய் கட்டிகள், மார்பகம், கண்கள், வயிறு, தலை, கழுத்து, நுரையீரல், தண்டுவடம் போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்க்கு இந்த வகை ரேடியேஷன் சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages