சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கமல்ஹாசன், வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு தற்போது தக்கையாக உள்ளது, அதனை மீண்டும் முழு உருவம் பெறச்செய்வது முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். நாற்காலி கிடைத்ததும் மக்களை புறம் தள்ளாமல் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக அரசு செயல்பட வேண்டும். ஓட்டுக்கு லஞ்சம் வாங்க கூடாது என இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும். ஓட்டுக்கான பண மதிப்பை விட வாக்குறுதிக்கு முக்கியத்துவம் அளித்தல் அவசியம். திருட்டை குறைத்தால் மக்களுக்கான தேவைகள் பூர்த்தியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாது என சொல்லிவிட முடியாது. நிலைமையை பொருத்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்-கமல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment