ரபேல் விவகாரம்-மக்களவையில் நிர்மலா சீதாராமன் ஆவேசம் - Agnipuratchi

ரபேல் விவகாரம்-மக்களவையில் நிர்மலா சீதாராமன் ஆவேசம்

Share This

ரபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பாக காங்கிரஸ் தரப்பிலிருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்த பதிலடியினை இன்று ராணுவ துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்தார். அவர் கூறியதாவது, "நமது நாட்டின் அண்டை நாடுகள் எவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஆயுதங்களை தர வேண்டியது நமது கடமை. இந்தியாவின் அண்டை நாடான சீனா ஜே-10, ஜே-11, சுகோய் 27 மற்றும், 30 உள்பட 400 அதிநவீன விமானங்களை வாங்கி குவித்துள்ளது. இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் வாங்குவது அவசர அவசியமானது என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் வாங்க ஒப்பந்தம் செய்த 187 போர் விமானங்கள் ஏன் வந்து சேரவில்லை⁉என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து, பாஜக ஆட்சியில் போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி முதல் விமானம் 3 ஆண்டுகளில் வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages