நாளை முழுவதும் தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் - Agnipuratchi

நாளை முழுவதும் தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம்

Share This

டிராய் எனப்படும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ஜனவரி 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்து ரூ.153.40 கட்டணத்திற்கு கண்டு களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது, என்று கூறப்பட்டுள்ளது. மாதம் மாதம் ரூ.130, அதற்கான ஜி.எஸ்.டி.சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலாகும். இந்த புதிய கட்டண விதிகளுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், புதிய டிராய் கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என்று தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages