சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 2,900 முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டின் போது நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்புத்துறை கொள்கையை வெளியிடுகிறார் தொழில் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி, ராணுவ தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது. இதனை தொடர்ந்து நாளை நடக்கும் 2வது நாள் மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் துவக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment