கஜா நிவாரணப் பணிகளுக்காக திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி கோரிக்கை - Agnipuratchi

கஜா நிவாரணப் பணிகளுக்காக திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி கோரிக்கை

Share This

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7ம் தேதியன்று உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து, இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 28ம் தேதிஅந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரசாத் என்பவர் தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு மனுவில், "கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்தால், விசாரிப்பதாக கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages