பாமகவின் தேர்தல் கூட்டணி குறித்து ஊடகங்களில் வரும் அனைத்து வியூகங்களும் தவறானவை என அக்கட்சியின்இளைஞரணி தலைர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் தமிழ்நாடு இளம் சிந்தனையாளர்கள் மன்றம் சார்பில் 2வது தமிழ்நாடு சமூக ஊடக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாமக 6 மாதங்களுக்குமுன்பே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டதாக தெரிவித்தார்.தமிழகம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் நாடாளுமன்றத்தில் தனி ஒரு மனிதனாக குரல் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர்,பாமகவின் தேர்தல் கூட்டணி குறித்து ஊடகங்களில் வரும் அனைத்து வியூகங்களும் தவறானவை என கூறினார்.
தொடர்ந்துபேசிய அவர், சமூக ஊடகங்களில்நன்மை, தீமை என 2ம் கலந்து உள்ளது எனவும், தீமைகள்குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.கோடநாடு விவகாரத்தில் நடுநிலையான விசாரணை தேவை என்றும்,யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுதண்டணை வழங்கப்படவேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment