திருவாரூரில் தேர்தல் நடக்குமா❓ - Agnipuratchi

திருவாரூரில் தேர்தல் நடக்குமா❓

Share This

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி.ராஜா, தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது. அதைத் தொடர்ந்து, சத்யபிரதா சாஹூவின் உத்தரவின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நிர்மல்ராஜ் ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், நிவாரணப் பணிகள் முடிந்த பிறகு தேர்தலை நடத்தலாம் எனக் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கள நிலவர அறிக்கை, சத்யபிரதா சாஹுவுக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது. சத்யபிரதா சாஹு அந்த அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று அனுப்பியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவின் அறிக்கை அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக டி.ராஜா தொடர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages