விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பில், தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளிடம் கேட்காமலேயே விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருவதாகவும், 2 லட்சத்துக்கும் மேலான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இந்த கவனஈர்ப்பு தீர்மானத்துக்குப் பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது "சத்தீஸ்கரிலிருந்து மின்சாரம் கொண்டு வரும் திட்டம், 7ஆண்டுகள் போராடி பெற்ற திட்டம் என்று தெரிவித்தார். 800 கிலோவாட் அளவுக்கு மின்சாரத்தை நிலத்துக்கு அடியில் கொண்டு செல்வதற்கான கேபிள் இல்லை என்றும், அப்படி ஒரு தொழில்நுட்பம் அமெரிக்காவில் கூட இல்லை என்றும் தங்கமணி கூறினார். மேலும் விவசாயிகளிடம் தவறான தகவல்களைப் பரப்பி, அரசியல் காரணங்களுக்காக விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபடத் தூண்டி வருவதாகவும்" அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.
உயர் அழுத்த மின்சாரத்தை நிலத்துக்கு அடியில் கொண்டு செல்ல வாய்ப்பில்லை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment