மன்னர்களின் காலத்தில் உருவானது ஜல்லிக்கட்டு என்றும், தமிழ் மக்களின் விளையாட்டு என்பதற்கு கலித்தொகை தவிர வேறெதிலும் ஆதாரம் இல்லை என்றும் மனுதாரர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும், ஜல்லிகட்டு குழுக்களில் அனைத்து சமூக பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய அரசுக்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக் குழுவில் யாரெல்லாம் அங்கம் வகிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் அதில் நீதிமன்றம் கருத்து கூற முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியின் போது போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உயிரிழந்தாலோ, நிரந்தர ஊனம் அடைந்தாலோ அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது யார்⁉என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஜல்லிக்கட்டு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment