தொடக்கப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு - Agnipuratchi

தொடக்கப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

Share This

தொடக்க பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் தமிழக அரசு முயற்சியால் 3,000 தலைமை ஆசிரியர்கள் பதவி தரம் குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 105 பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் பதவி தரம் குறைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசின் இந்த முடிவால் ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. முன்னதாக, தமிழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் 1,500 அரசு ஆரம்பப்பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் கீழ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages