நடிகர் சங்க கட்டிட பணிகள் தீவிரம் - மே மாதம் தேர்தல் நடத்த முடிவு❗ - Agnipuratchi

நடிகர் சங்க கட்டிட பணிகள் தீவிரம் - மே மாதம் தேர்தல் நடத்த முடிவு❗

Share This

தயாரிப்பாளர் சங்கத்தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார் நடிகர் விஷால். இவர்களின் 3 வருட பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதமே முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் பொதுக்குழுவை கூட்டி நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைத்தனர். தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. தரைதளமும் 3 மேல் தளங்களும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு தளம் மட்டும் கட்ட வேண்டியுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் கட்டுமான பணிகளை முடித்து கட்டிட அலங்கார வேலைகளை தொடங்கவுள்ளனர். அலுவலக அறைகள், கலை அரங்கம், மாநாட்டு கூடம், திருமண மண்டபம், உடற் பயிற்சி கூடம், நடன பயிற்சி அரங்கம் ஆகியவை ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. வரும் மே அல்லது ஜூன் மாதம் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற மே மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் விஷால் அணியினர் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு உள்ளனர். எதிர்தரப்பு அணியினரும் நடிகர் ராதாரவி தலைமையில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages