சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துக்களை தடுக்க முடியாது - தேர்தல் கமிஷன் - Agnipuratchi

சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துக்களை தடுக்க முடியாது - தேர்தல் கமிஷன்

Share This

சமூக வலைதளங்களில் அரசியல் கருத்து தெரிவித்தால் அதை தடுக்க முடியாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து தேர்தல் விளம்பரங்கள், அரசியல் கருத்துக்களை வெளியிட தடை விதிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வலியுறுத்தி வழக்கறிஞர் சாகர் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணையின் போது , அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு விளம்பரங்களோ, பிரசாரமோ செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தனிநபர் தனது வலைப்பதிவிலோ அல்லது சமூகவலைதளங்களிலோ தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும் போது அவர்களை தேர்தல் கமிஷனால் எப்படி தடுக்க முடியும் என தேர்தல் கமிஷன் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages