தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எனது வணக்கம்'- மதுரை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி தமிழில் உரையை தொடங்கினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
நாடு முழுவதும் 9 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 47 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலை, நீர்வழி, ஆகாயம் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அடிப்படை வசதிகள் கட்டமைப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. நான்கரை ஆண்டுகளில் 35 ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனுஷ்கோடி- ராமேஸ்வரம்-பாம்பன் இணைப்புப் பாலம் 21,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
மதுரை- சென்னை இடையே அதிநவீன தேஜஸ் ரயில் இயக்கப்படும்.
தமிழகத்தில் 10 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தில் தமிழகம் மிக சிறந்த பங்கு வகிக்கிறது.
உற்பத்தி துறையில் தமிழகம் தன்னிறைவு பெற்று திகழ்கிறது. தூத்துக்குடி துறைமுகம் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு திட்டங்களை வகுத்துள்ளது.
3 நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவ கல்லூரி உருவாக்குவதே எங்கள் நோக்கம்.அதிவிரைவு டி-18 ரயில்கள் விரைவில் நாடு முழுவதும் இயக்கப்படும்
நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது பட்டியலினத்தவர் பிற்படுத்தப்பட்டவர்களை எவ்விதத்திலும் பாதிக்காது
10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக சில சுயநல சக்திகள் எதிர்மறை கருத்துகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.
அனைவரும் சமூகத்தில் சமவாய்ப்பு பெறவே 10 சதவிகித இட ஒதுக்கீடு மத்திய அரசு கொண்டு வந்துள்ளது
10சதவீத இட ஒதுக்கீட்டை தவறாக சித்தரிக்க முயல்வது சரியல்ல. இத்தகைய கருத்துக்களை பரப்புபவர்களிடம் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
ஏழை மக்களுக்கான திடட்டங்களை எதிர்ப்பது சரியல்ல.
நாட்டின் காவலனாக இருப்பவரை நீக்குவதற்கு" முயற்சி செய்கின்றனர்.
ஊழல் மற்றும் மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்-பிரதமர் மோடி.
No comments:
Post a Comment