அறங்காவலர் குழு இல்லாததால் தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து, திருச்செந்தூர் கோயிலின் வெளிப்பிரகார மண்டம் இடிந்தது போன்ற பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அறங்காவலர் குழு இருந்திருந்தால் முன்கூட்டியே தேவையான பாதுகாப்பு வசதிகள், அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும். எனவே நீதிமன்றம் தலையிட்டு அனைத்து அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர் குழுவை நியமித்து, அந்த குழுவில் உரிய இடஒதுக்கீடு அடிப்படையில் பெண்கள், தாழ்த்தப்பட்டோரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று புதுக்கோட்டையை சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையில், நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்கள் ஒரு மாதத்தில் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட ஆணை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment