திருவையாறு ஆராதனை விழா -தியாகராஜருக்கு இசையஞ்சலி - Agnipuratchi

திருவையாறு ஆராதனை விழா -தியாகராஜருக்கு இசையஞ்சலி

Share This

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரிக் கரையில் அமைந்துள்ள தியாகராஜர் சமாதி வளாகத்தில், அவரது 172வது ஆண்டு ஆராதனை விழா, தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில், தியாகராஜர் முக்தியடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளான இன்று, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து அவரது சிலை உஞ்சவர்த்தனி பஜனையுடன் ஊர்வலமாக விழா பந்தலுக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு தியாகராஜரின் சிலைக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை ⌚9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்களும் கலந்துக்கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். தியாகராஜர் ஆதாரதனையை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages