சமையல் சிலிண்டரின் விலை ரூ.1.46 குறைவு - Agnipuratchi

சமையல் சிலிண்டரின் விலை ரூ.1.46 குறைவு

Share This

கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன. அதற்கு ஏற்ப 14.2 கிலோ கியாஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி மானியத்துடன் கூடிய சிலிண்டருக்கு ரூ.1.46 குறைந்து உள்ளது. மானியம் இல்லாத சிலிண்டருக்கு ரூ.30 குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் தற்போது ரூ.704.85 ஆக இருந்த 14.2 கிலோ மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை, ரூ.674.85 ஆகவும், மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.482.88-ல் இருந்து ரூ.481.42 ஆகவும் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages