பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் இன்றைய டுவிட்டர் பதிவுகள் (15.02.2019) - Agnipuratchi

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் இன்றைய டுவிட்டர் பதிவுகள் (15.02.2019)

Share This


1)  இதழியல் துறையின் முன்னோடி சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப் படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அரசியல், இதழியல் மற்றும் தமிழர் நலனுக்கு ஆதித்தனார் ஆற்றிய பணிகளுக்கு சிறந்த அங்கீகாரமாக இந்த அறிவிப்பு அமையும்!
                               **************
2) உழவர் நலனுக்காக முல்லைப்பெரியாறு அணை அமைத்துக் கொடுத்த பென்னிகுயிக், பாசனக் கால்வாய் அமைத்த காலிங்கராயர், விடுதலை மற்றும் எல்லைப் போராட்ட வீரர் ம.பொ.சிவஞானம்,  ஆகியோரின் பிறந்த நாள்கள் அரசு விழாக்களாகக் கொண்டாடப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்!
                               ****************
3) வீரத்தின் விளைநிலமாகவும், தமிழுக்கு தொண்டனாகவும் திகழ்ந்த மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு சிறப்பானது. திருச்சி விமான நிலையத்திற்கு அவர் பெயரைச் சூட்டவும் நடவடிக்கை தேவை!
                               ******************
4) தமிழுக்கு தொண்டு செய்த கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, நீதிக்கட்சியின் வைரத்தூண் ஏ.டி.பன்னீர்செல்வம், ஆழியாறு அணைத் திட்டத்தின் மூலவர் பழனிச்சாமி கவுண்டர் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அவர்களுக்கு செய்யப்படும் சிறந்த மரியாதை!
                                *******************
5) விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிக்கப் பட்டது வரவேற்கத்தக்கது. கட்டபொம்மனின் தளபதி வீரன் சுந்தரலிங்கத்தின் மணிமண்டபம் சீரமைக்கப் பட்டு நூலகமும் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வீரத்தளபதிக்கு பெருமை சேர்க்கும்!
                                 ******************
6) சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனாருக்கு மணிமண்டபம், நாமக்கல் மாவட்டத்தில் ராஜவாய்க்கால் அமைத்த  அல்லாள இளையநாயகருக்கு குவிமாடத்துடன் திருவுருவச்சிலை, பூலித் தேவனின் தளபதி ஒண்டிவீரனின் மணிமண்டபம் புதுப்பிக்கப்படும் ஆகிய அரசின் அறிவிப்புகள்  வரவேற்கத்தக்கவை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages