கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமான தீவிரவாத தாக்குதலைராணுவத்தினர் நேற்று எதிர்கொண்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் காரில் 350 கிலோ வெடிகுண்டை நிரப்பிக்கொண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎப் வீரர்கள் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதலால் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு பற்றிய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி, "இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். உயிர்நீத்த வீரர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்களும், பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்-50 வீரர்கள் வீர மரணம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment