கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதனை அடுத்து, குடிநீர் வினியோகம் சீராக நடைபெற 158 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதன்படி சென்னை குடிநீர் பணிகளுக்கு 122 கோடி ரூபாயும், நகர மற்றும் கிராம குடிநீர் பணிகளுக்கு 36 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகர மற்றும் கிராமங்களில் குடிநீர் வினியோகம் தடையின்றி நடப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆழ்துளை கிணறு அமைத்தல், குடிநீர் குழாய்களை சீரமைத்தல் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர்கள் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கோடைகால குடிநீர் வினியோகத்திற்காக ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment