பாப்பநாயக்கன் பாளையத்தில் 300 ஆண்டுகள் பழமையான பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அந்த கோயிலில் நேற்று இரவு பூஜைகள் முடிந்த பிறகு பூசாரி வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கோவிலின் பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலினை உடைத்து கொள்ளை அடித்ததோடு ஒன்றரை அடி உயரமுள்ள சுமார் ஒரு கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையும் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து சோதனை மேற்கொண்டுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment