சபரிமலை தொடர்பாக தொடரப்பட்ட 51 சீராய்வு மனுக்கள் -இன்று விசாரணை - Agnipuratchi

சபரிமலை தொடர்பாக தொடரப்பட்ட 51 சீராய்வு மனுக்கள் -இன்று விசாரணை

Share This

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது⚖. இந்த விவகாரத்தில், கேரள அரசைக் கண்டித்து இந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சபரிமலை தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனு உட்பட மொத்தம் 51 சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஜனவரி 22ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் உள்ள பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மருத்துவ விடுப்பில் உள்ளதால் விசாரணை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஓர் அறிவிப்பு வெளியானது. அதன் படி, "பெண் நீதிபதி இந்து மல்கோதரா விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பியுள்ளதால் சபரிமலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 51 சீராய்வு மனுக்கள், புதிய வழக்குகள் பிப்ரவரி 6ல் விசாரணைக்குவருகிறது  என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, 51 சீராய்வு மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages