தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் அசல் சான்றிதழ்களை, அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், சான்றிதழ் நகல்களை மட்டும் வைத்துக் கொள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியது. இதனை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்படி, சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்தால், கல்வியாண்டின் இடையிலேயே பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாறிவிடக் கூடும். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மேலும்,பொறியியல் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கவுன்சில் ஆய்வு செய்யும்போது பேராசிரியர்களின் சான்றிதழ்களை காட்ட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து தற்போது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் மனுவுக்கு 2 வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் அசல் சான்றிதழ் விவகாரம்-உயர்நீதிமன்றம் இடைகாலத்தடை
பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் அசல் சான்றிதழ் விவகாரம்-உயர்நீதிமன்றம் இடைகாலத்தடை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment