வேலூா் அருகே 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் - Agnipuratchi

வேலூா் அருகே 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Share This

வேலூா் மாவட்டம் காட்பாடி டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான காவல் துறையினா் நேற்று காலை கரசமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அப்போது, லோடு ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்ததில், சட்டத்திற்கு விரோதமாக செம்மரக் கட்டைகள் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த 4.7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், வாகனத்தில் இருந்த அமானுல்லா, அஸ்லாம், பெரோஷ், பாட்ஷா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த செம்மரக்கட்டைகள் அனைத்தும் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக பிடிபட்டவா்கள் தொிவித்துள்ளனா். இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages