தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், பாஜக ஆதரவு தருவதாக கூறப்படும் முகேஷ் அம்பானி சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி, அனந்த் பிரமல் ஆகியோரின் திருமணம் டிசம்பர் 12ம் தேதி கோலாகலமாக நடைப்பெற்ற நிலையில், தற்போது அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், சோக்லா மேதாவின்க்கும் வரும் மார்ச் 9ம் தேதி திருமணம் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண பத்திரிக்கையை வழங்கி அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, முகேஷ் அம்பானிக்கு கலைஞர் எழுதிய தாய் புத்தகத்தை ஸ்டாலின் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முக்கேஷ் அம்பானி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment