விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 🎉பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த குவன்பாறை 🎉பட்டாசு ஆலையில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் இடிந்து தரைமட்டமான மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பட்டாசுகள் வெடித்து கொண்டே இருப்பதால் மீட்புப் பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பட்டாசு ஆலை சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 10 அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 10 அறைகளில் இன்று காலை வழக்கம் போல சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியும் அனுமதியின்றி பெரிய ரக பேன்சி பட்டாசுகளும் தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டாசு தயாரிப்பின் போது உராய்வின் காரணமாக இந்த ஆலையின் ஒரு அறையில் பட்டாசுகள் வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த விபத்தில் இந்த ஆலையில் உள்ள அனைத்து அறைகளும் தரைமட்டமாயின. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பட்டாசுகள் தொடர்ந்து வெடிப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சாத்தூர் அருகே வெடி🎉 விபத்து-👥5 பேர் பலி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment