பிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதி 🏆விருது - Agnipuratchi

பிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதி 🏆விருது

Share This

1988ஆம் ஆண்டில், 160 நாடுகள் பங்கேற்று, வெற்றிகரமாக சியோல் ஒலிம்பிக் நடத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில், சியோல் அமைதிப் 🎁பரிசு ஏற்படுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்படும். அந்த வகையில், 2018ஆம் ஆண்டுக்கான 🏆சியோல் அமைதிப் பரிசை சியோல் நகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். தமது நாட்டிற்கும், உலகிற்கும் 💸பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களித்ததற்காகவும், மண்டல மற்றும் உலகளாவிய அமைதியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக, விருது வழங்கும் நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது. இது குறித்து பேசிய மோடி, இந்த விருது தனக்கு மட்டும் கிடைத்த பரிசல்ல, 130 கோடி மக்களின் ஆற்றலால், கடந்த 5 ஆண்டுகளில் 🇮🇳இந்தியா ஈட்டிய வெற்றிக்கும்🎉 இந்திய நாட்டு மக்களுக்கும் கிடைத்த 🏆விருது என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages